ஹிஜ்ரி வருடம் 1436, ரபீஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறையை இன்று செவ்வாய்க் கிழமை (23) மாலை மஃரிப் நேரமாகிய 6.02 மணி முதல் பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கேட்டுள்ளது.
ரபீஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறையைக் கண்டால், நேரிலோ அல்லது 0112-432110, ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டோ அறியத்தருமாறும் ஜம்இய்யதுல் உலமா  அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.