Subscribe Us

பாசமிகு தந்தையின் மட்டில்லா மகிழ்ச்சி... அழுது கொண்டு சிரித்தேன்! சிரித்துக் கொண்டு அழுதேன்!!

 
என்  சின்ன மகள்
கறுப்பு அங்கியணிந்து 
மூன்று நீதிபதிகள் முன்பு
முன்தினம் போனாள்
சட்டம் உரைக்கவல்ல அதையுரைக்க
சத்தியப் பிரமாணஞ் செய்யவதற்காய்
எல்லோருக்கு ஒரு வகை இன்பம் ஒரு முறைதான்
எல்லாவம் வல்லவன் என்குத் தந்தான் இரண்டாம் முறையும்
தமக்கை நடந்த பாதையில் தங்கை நடந்தாள்.
தாயுமாய் தந்தையுமாய் தனித்து நின்ற
மென்மை  இதயம் உள்ளே
 இரும்பாய்க் கனத்தது
இன்பத்தின் எல்லைக்கே ஓடினேன்
அழுது கொண்டு சிரித்தேன்
சிரித்துக் கொண்டு அழுதேன்.
நாலுபேர் தோல் சுமக்க
வெண்மையுடுத்தி இவள் தாய்
ஊர்வலம் போன நாளில்
ஊற்றெடுத்த கண்ணீரும்
உணர்விழந்த உடலுமாய் பின்சென்று
மண்ணறைக் கதவுகள் மூடப்படும் வரை நின்று
மகள் மார் முகம் பார்க்க
ஓடிய நாள் இன்னும்  மறக்கவில்லை,
ஐந்து, மூன்று ஒன்றென்ற வயதில்
நின்ற பிஞ்சுளை  அள்ளி‌யெடுத்தணைத்து
குமைந்து குமைந்து அழுத கண்ணீர் வற்றவில்லை
வருடங்கள் இருபத்து நான்கு  ஓடிவிட்டன
வந்து வந்து  போன ஆண்டுகள்
ஓசையின்றி இவர்களை வளர்ந்துவிட
மூன்றில் இரண்டை   சட்டத்தரணிகாளாக்கிவிட
கறுப்பணிந்து உச்ச நீதிபதிகள்
மூவர் முன்னெழுந்து
என்பேருடன் தன்பேர் சொல்லி
சத்தியப் பிரமாணஞ் செய்த
மாட்சிகண்டு உச்சிவரையில்
மின்சாரம் ஓடிய உணர்வுணர்ந்து
அழுது கொண்டு சிரித்தேன்
சிரித்துக் கொண்டு அழுதேன்
சொல்லவொரு சங்கதி வைத்திருக்கிறேன்
எனக்கு மூன்று பெண் மக்கள்
பெறாமகள் எனக்கு ஸெய்னப்.
அவளுக்காய் நான் பாடிய தாலாட்டை
முதல்  நாள் பாடியவர் நால்வர்
அவரில்  மூவர் சட்டத்தரணிகள்
இருவர் என்மக்கள்
மூன்றாமவள் சின்னவள் தோழி
அவளும்  இதே கறுப்பணிந்து
இதுபோல் போவாள் அடுத்த ஆண்டு
மூன்று சட்டத்தரணிகள் பாடிய
செய்னப்பின்  பாட்டை
ஒரு முறை மீட்டிப் பார்க்கிறேன்
” அறிவைத் தேடிவந்தோம்
உன் அருளை நாடிவந்தோம்
நிறைவாய்க் கற்றுயர
எமக்கருள்வாய் அல்லாஹ்வே!!
 
                                                                                                              -எம்.எஸ். அப்பாஸ்
நன்றி:PuttalaToday

Post a Comment

0 Comments