Subscribe Us

அது என்னுடைய கையெழுத்து அல்ல


பொதுஎதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நான் செய்­துள்­ள­தாக கூறப்­படும் இர­க­சிய உடன்­ப­டிக்கை பொய்­யா­னது. உடன்­ப­டிக்­கையில் இடப்­பட்­டுள்ள கையெ­ழுத்து என்­னு­டை­யது அல்ல என தெரி­விக்கும்எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை ப்­பாடு செய்­துள்ளேன்.
அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
பொது எதி­ர­ணியின் மீது அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்தி வரு­கின்­றது. இப்­போதும் பொது எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்­றினை கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­வித்­துள்ளார்.

திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­விப்­பதைப் போல் எனக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் இடையில் எந்­த­வொரு இர­க­சிய உடன்­ப­டிக்­கையும் இல்லை. இர­க­சி­ய­மாக உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளவும் இல்லை.
அர­சாங்கம் எம் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து அவர்­களின் தோல்­வி­யினை தடுத்து நிறுத்தும் முயற்­சி­யொன்­றி­னையே மேற்­கொண்­டுள்­ளனர். அதேபோல் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக வெளிப்­ப­டுத்­திய உடன்­ப­டிக்­கையில் இருப்­பது எனது கையொப்­ப­மில்லை. பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து என் மீது குற்றம் சுமத்­து­கின்றார். எனவே இதற்கு எதி­ராக நான் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்ளேன்.
தற்­போது இவ் அர­சாங்­கத்தின் எம் மீதான பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளேன். எனது கையொப்­ப­மென பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து எம் மீது குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு திஸ்ஸ அத்­த­நா­யக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கையொப்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு என் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments