Subscribe Us

header ads

உயிரை பணயம் வைத்து களத்தில் குதித்துள்ளேன்! சந்திரிக்கா


உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். நாட்டில் ஊழல், இலஞ்சம்,கொள்ளை, கொலை, வெள்ளை வேன் கடத்தல் என பல குற்றச் செயல்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

எனவே இவற்றை இல்லாதொழித்து நாட்டை பரிசுத்தமாக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.  மக்களுக்காக செயற்பட வேண்டிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.

சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னும் பலர் எம்மோடு வந்து இணைய உள்ளனர்.

இது சவாலான போராட்டம் என்றாலும் எமது உயிரைப் பணயம் வைத்து இந்நாட்டின் மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம்.

9 வருடங்கள் நான் அரசியலிருந்து விலகி இருந்தேன். நாடு அழிவுப்பாதைக்குச் செல்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

எனவே தான் எமது நாட்டு பிள்ளைகளை அழிவிலிருந்து பாதுகாக்க சவாலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று காலை கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியில் வைத்து கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments