PTPV
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
திருமணம் செய்யும் வயதை பூர்த்தி செய்யாத சிறுமியை பாலியல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் 14 வயதான சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்பிட்டி மீன்பிடி கிராமத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
தாம் வீட்டில் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் தனது மகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக இளம் பெண்ணின் தாய் கல்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
/JAH

0 Comments