ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவைகள் சென்று தேர்தல் பிரசாரம் செய்யப்படவுள்ளது.
வழமையாக கட்சிகள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும். எனினும், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டின் சகல வீடுகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மூன்று தடவை சென்று வாக்கு சேகரிக்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இதற்கு மேலதிகமாக பிராந்திய வாரியாகவும், தேர்தல் தொகுதி வாரியாகவும், வாக்குச் சாவடிகள் அடிப்படையிலும் சிறு கூட்டங்களின் மூலம் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக ஒரே வீட்டுக்கு மூன்று தடவை சென்று ஜனாதிபதி மஹிந்த குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி அமைப்பாளர்களின் பூரண கண்காணிப்பில் இவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாவட்ட மட்டத்தில் 27 பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments