இலங்கையின் அரசாங்கத்தை மாற்றுவதற்காக (பேஸ்புக்) முகநூல் பயன்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகரில் இடம்பெற்ற பிரசார நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில், அரசாங்கத்தை மாற்ற வேண்டுமானால், அது நாட்டுக்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிலர், தமக்கு லிபிய தலைவர் மஹ்முத் கடாபியின் நிலையே ஏற்படும் என்று கூறிவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு தேவையெனில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க தாம் தயார் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் இருந்து படையினரை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற தாம் இணங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


0 Comments