தற்போதைய விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என அரச நிறுவனமான லேக் ஹவுஸினால் வெளியிடப்படும் ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் தலையங்கமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிக்கையில்,
"அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரிந்து கல்முனை கரையோர மாவட்டத்தினை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை விடுதலைப் புலிகளின் தமிழீழத்திற்கு சமமானதாகும். இதனால் குறித்த கோரிக்கையினை அரசாங்கம் நிராகரித்தது" என்றார்.-AW-


0 Comments