Subscribe Us

கொலன்னாவையில் மைத்திரியின் கூட்டம் நடைபெற இருந்த மேடை மீது துப்பாக்கி பிரயோகம்



பொது வேட்பாளரை ஆதரித்து எதிர்க் கட்சிகளினால் இன்று கொலன்னாவையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்ட மேடையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றில் வந்த குழுவொன்று இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் ஏற்பாடு செய்திருந்த பொது எதிரணின் கூட்ட மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோது பொலிஸார் அவ்விடத்தில் கடமையில் இருந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடமாடும் பொலிஸ் வாகனம் ஒன்றும் அவ்விடத்தில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடமை நேரத்தில் பொலிஸார் பொடுபோக்காக இருந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

பட உதவி:News1st

-AsM-

Post a Comment

0 Comments