முஹாஜிரீன்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ரூபா.12 மில்லியன் நிதியில் அட்டாளைச்சேனை ஆலங்குளம் மத்திய வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று (24) புதன்கிழமை இவ் வீதியின் அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக அங்குராப்பணம் செய்து வைத்தார்.
இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் உயர் அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்./JAH




0 Comments