Subscribe Us

header ads

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

முஹாஜிரீன்


கிராமப்புறங்களில் வாழும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கத் தயாராகவுள்ளனர். அதே போன்று இங்குள்ள கிராமங்களில் வாழும் மக்களும் ஜனாதிபதிக்கே வாக்களிக்க வேண்டுமென தேசிய காங்கிரஸின் தலைவரும்இ மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இன்று (24) அட்டாளைச்Nனை ஆலம்குளம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகைலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தொடந்து உரையாற்றுகையில்இ கிராமப் புறங்களில் வாழும் மக்களை நிம்மதியாக வாழவைத்து வரலாறு காணாத அபிவிருத்திகளையும் ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

தேசிய காங்கிரஸ் எப்போதும் மக்களுக்கு சிறந்த அரசியல் பாதையை வழிகாட்டி வருகின்றது. இன்று சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் பாதையை காட்;ட முடியாமல் தடுமாறுகின்றன. மற்றைய சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு சில முஸ்லிம் தலைமைகள் செயற்படுவது கவலையளிக்கின்றது.   

கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல் வருமானம் குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

இவ் வைபவத்தில கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையும் கலந்து கொண்டார்./JAH




Post a Comment

0 Comments