எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டி பொதுச் சந்தை கட்டட அங்குரார்ப்பண வைபவத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
நாட்டில் நிலவிய அரிசி தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்குகின்றோம்.
50 ரூபாவிற்கு ஒரு கிலோ அரிசியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் யாருடனும் எதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றது.
ஹெல உறுமய மற்றுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது. மற்றுமொரு தரப்பு இன்னுமொரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றது.
எனினும், என்னுடன் இருக்கும் சகோதரர்கள் இந்த நாட்டின் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுத்து என்னுடைய பயணத்திற்கு கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பதனை நான் இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments