புத்தளம் மரிக்கார் வீதியைச் சேர்ந்த முஹமட் பாரிஸ் அவர்கள் நேற்று குவைட் நாட்டில் காலமானார். (இன்னலில்லஹ்) அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை குவைட் நாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்த இவர் குவைட் நாட்டு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கோமா நிலையில் இருந்து வந்தார், அவரது நிலையில் எதுவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் நேற்று வைத்தியசாலையில் வைத்தே காலமானார்.
வல்ல நாயன் அல்லாஹுத் தாலா, அவரது நல் அமல்களை ஏற்று அவருக்கு ஈருலக வெற்றியை வழங்குவானாக ஆமீன்.
மல்ஹார் மௌலவி - குவைத்திலிருந்து


0 Comments