பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாகப் பிரியும் அறிகுறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர், காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகி பொது அபேட்சகருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு வழங்கிய எந்தவிதமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், இதனால், முஸ்லிம்கள் ஜனாதிபதி குறித்தும் அரசாங்கம் பற்றியும் முழுமையாக நம்பிக்கையிழந்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.மு.கா. இன் உயர் பீட உறுப்பினர் ஒருவர் மேற்படி ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments