Subscribe Us

header ads

அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடவுள்ளார் மைத்திரிபால

 

திர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front) கட்சியின் கீழ் “அன்னப் பறவை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
புதிய ஜனநாயக முன்னணி என்ற கட்சி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா குறித்த கட்சியின் கீழ் “அன்னப் பறவை” சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன “எங்கள் தேசிய முன்னணி” (Our National Front) கட்சியின் கீழ் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான போதும், எதிர்கட்சித் தலைவர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. 
 -AsM-

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments