கட்சிகளின் பிரதான தேர்தல் வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களைத்
தெரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு தீர்மானங்களுக்கு வரமுடியாது என ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற கட்சி அங்கத்தவர்களிடையிலான சந்திப்பில் கருத்துரை நிகழ்த்தும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு கட்சித் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில்
நடைபெற்றுள்ளது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலியும்
கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது,


0 Comments