Subscribe Us

header ads

தங்கத் தாம்பாளத்தில் பிரதமர் பதவி! திரும்பியும் பார்க்காத மைத்திரிபால- ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?


அமைச்சர் மைத்திரபால சிரிசேனவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பிரதமர் பதவி வழகங்ப்பட்ட நிலையில், அதனை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தின் இடைநடுவில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் அதனை மறுத்து, தனக்கு பிரதமர் பதவியில் நாட்டமில்லை என்று முகத்திலடித்தாற் போன்று பதிலளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஜனாதிபதி தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கையெழுத்திட்டார்: மைத்திரிபால வெளியேறுகின்றார்?
அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தற்போது தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதை அடுத்து அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு-07 ல் உள்ள மகாவெலி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் ஒன்றிலேயே அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நீண்டகாலமாக வசித்து வந்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சு பதவியை துறந்து ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறும் முடிவில் உள்ள அவர் முதற்கட்டமாக உத்தியோகபூர்வ இல்லத்தை காலிசெய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தற்போது அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பெறுமதியான பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் நாளை மத்தியானத்துக்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

அதன்பின் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments