பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுகொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் மைத்திரிபால
சிறிசேனவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்குப்
பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை தமது கட்சி தேசிய தேர்தலொன்றுக்கு தயாராகி
வருவதாகவும், முதலில் ஜனாதிபதிதேர்தலா அல்லது பொதுத்தேர்தலா
நடைபெறும் என்பது தொடர்பில் இறுதி முடிவுகள் இதுவரையில்
எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


0 Comments