பூமுதீன் மலிக்

மன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு செய்த 220 தமிழ், முஸ்லிம்
இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (31)
நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முத்து முகம்மட், அப்துல் பாரி என பலர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் அமைச்சரால் இலவசமாக சாரதி பயிற்சி வழங்கி இளைஞர்
யுவதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுப்பதும்
குறிப்பிடத்தக்கது.






0 Comments