பதுளை – கொஸ்லாந்த பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்யத் தயாராகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இலங்கை அரசுடன் இணைந்து செய்ய தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஹாசிம்குரேசி தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பாரிய மண்சரிவுக்குள்ளாகி உயிர்நீத்த மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தந்துதவுவதிலும் பாகிஸ்தான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் இராணுவ மேஜர் ஜெனரல் சரிப் இலங்கை இராணுவ அதிகாரி டயா ரட்ணாயக்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளார்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments