முதலில் அந்த சகோதரிக்கு நாம் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.
அடுத்தது அந்த சகோதரி செய்த தவறு என்ன? படியுங்கள். வீடியோவையும் பாருங்கள்.
ஐ டி துறையில் வேலை செய்யும் பெண் , சமீபத்தில் தன் மகள் வற்புறுத்தலின் பேரில் ” வாட்ஸ் அப்பில் ” இணைந்துள்ளார் .
கடந்த மாதம் இவருக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ப்ரொபைல் இல் இருந்த இவரின் போட்டோவை எடுத்து சென்னை முழுதும் திருடுவதாக வீண் புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் .
பின்னர் தன்னுடன் வேலை செய்யும் தோழி ஒருவர் உன் போட்டோ ” வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் ” திருடி என்று அங்கும் இங்கும் உலா வருகிறது என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார். சற்றும் எதிர்பாராத அந்த பெண் மனம் உடைந்து நான் செய்யாத ஒரு தவறை, நான் செய்ததாக கூறி தன்னை அவமானம் செய்த அந்த நபரை கண்டுபிடித்து தண்டனை வழங்க கூறி ” சைபர் கிரிமினல் செல்லில் ” புகார் அளித்துள்ளார். புகார் நம்பர் :- 025429804.
அதற்கான தீர்வுக்காக அவர் காத்துகொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது பத்திரிகையிலும் அவர் போட்டோவுடன் அந்த செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது .
பெண்களே எந்த ஒரு சோசியல் நெட்வொர்க்கிலும் உங்கள் போட்டோவை இணைக்காதீர்கள். இணைப்பதின் பின் விளைவுகளில் இப்பெண்ணுக்கு நேர்ந்தது ஒரு சாம்பிள். இந்த செய்தியை யார் யார் எல்லாம் சேர் செய்தார்கள் என்பதை வீடியோவில் பாருங்கள்.
நன்றி : முத்துப்பேட் நிவ்ஸ்
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments