ஆளும் கட்சியை விட்டு விலகுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்லாமல் தடுப்பதற்கு கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் இதனால் பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


0 Comments