Subscribe Us

header ads

வரலாற்று ஆச்சரியம்...கினறு வெட்டப்போய் கிளம்பிய புராதன மற்பாண்டங்கள்

கினறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல, கினறு வெட்ட பண்டைய குடம் கிளம்பிய கதை புத்தளம் - எலுவன்குளம் வீதியில் அமைந்துள்ள மைலன்குளம் கிராமத்தில் நடந்துள்ளது.
விவசாய குடும்பமான ஜீ.டீ. பியசிரி, கே.ஏ. கருணாவதீ தம்பதியினர் பயிர்செய்கைக்காக காணியை சுத்தம் செய்யும்பொது மண்வெட்டியில் கனமான பொருளொன்று தட்டுப்பட்டதும் அதை தோண்டியெடுத்து சுத்தம் செய்து பார்த்தனர். சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட மற்பாண்டமொன்றில் சிதைவு என்பதைக் கண்டவுடன் இருவருக்கும் ஆர்வம் மேலிட்டது.
இன்னும் ஆழமாக தோண்டியபொது, அந்த இடத்தில் பழங்கால கினறு ஒன்று மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஊர் மக்களின் உதவியோடு கினறை சுத்தம் செய்யும்போது மேலும் பல மற்பாண்ட சிதைவுகளும் கடற்சிப்பியும் கிடைத்துள்ளது. இக் கினறு 8 அடி சுற்றளவும் 40 அடி ஆழமும் கொண்டது. 
செவ்விளநீர் போன்ற சுவைகொண்ட நீர் ஊற்றெடுக்கும் இந்தக் கினறில் இருந்து பியசிரி, கருணாவதீ குடும்பத்தாரும் அக்கம்பக்கத்து குடும்பங்களும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்கின்றனர். 
கினற்றின் கதை அப்படி இருக்க, அந்த மற்பாண்டத்தின் கதை என்னவென்று பார்ப்போம். 'இவை பூஞ்சாடிகளின் சிதைவுகளாக இருக்கலாம். அலங்கார வடிவங்களினால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. சூழையில் வைத்து சுடப்பட்டு பளபளப்புத்தன்மையுடன் காணப்படுகின்றது. இதன் காலத்தை சரியாகக் கூற முடியாதுள்ளது' எனக் கூறும் புத்தளம் தொல்பொருளியல் காரியாலயத்தின் அதிகாரியொருவர், 'சுமார் 500 வருடங்களை விட பழமைவாய்ந்தது' என தான் கருதுவதாகவும் கூறுகின்றார்.
சரித்திரத்திற்கு முற்பட்ட கால இலங்கையின் 'குவேனி' என்ற பெண் அரசி வாழ்ந்ததாகக் கூறப்படும் 'தம்பப்பண்ணி' பிரதேசம் மைலன்குளத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: Rivira
/Az


Post a Comment

0 Comments