Subscribe Us

header ads

சுவீடனின் முதலாவது மிக இளம் வயது அமைச்சராக ஒரு முஸ்லிம் பெண்

சுவீடன் நாட்டின் முதலாவது மிக இளம் வயது அமைச்சராக பொஸ்னிய பூர்வீக முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செயலார்வமிக்க இளம் முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கின்றார்.
ஐதா ஹத்சியாலிக் (Aida Hadzialic), 27 வயது, நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் (2014 ஒக்டோபர்) வெற்றிபெற்ற ஸ்டீபன் லொப்வான் (Stefan Löfven)-ன் Social Democrat கட்சியின் புதிய அமைச்சரவையில் 'மேல் இடைநிலை பாடசாலை மற்றும் முதியோர் கல்வித்துறை (Upper Secondary School and Adult Education) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது 23-ம் வயதில் சுவீடன் நகரான ஹாம்ஸ்டாட் (Halmstad)-ன் பதில் நகராதிபதிணியாக பதவி வகித்த ஐதா, University of Lund பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியுமாவார்.
1987-ம் ஆண்டு பொஸ்னியாவின் போகா நகரில் பிறந்த ஐதாவுக்கு 5 வயதாகும் போது (1992-ல்) சர்பிய துருப்பக்களினால் பொஸ்னியா-ஹர்சகோவினாவில் இன சுத்திகரிப்பு யுத்தம் மேற்கொண்டபோது அவருடைய குடும்பம் சுவீடனுக்கு இடம்பெயர்ந்தது.


/Az

Post a Comment

0 Comments