இவ்வருடம்
தொடக்கம் தேசிய கல்விக்கல்லூரிகளில் இணைத்துக்கொள்ளும் மாணர்களுக்கு
டிப்ளோமாவிற்குப் பதிலாக பட்டதாரிப் பட்டம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர்
பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு
மண்டபத்தில் நேற்று (15) நடைபெற்ற விஞ்ஞான போதனா ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி
நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலேயே
அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
இவ்வருடம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளும்
மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் இரண்டு வருட பயிற்சிக்கு மேலதிகமாக
ஒருவருட செயல்முறை பயிற்சியும் வழங்கப்பட்டு டிப்ளோமா சான்றிதழ்
வழங்கப்படுகின்றது.
ஆனால் எவ்வித செயன்முறைப் பயிற்சியுமற்ற
பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டதாரிப் பட்டம் கிடைக்கிறது இது மிகவும்
அநீதியானது. எனவே தான் இத்தகையதொரு தீர்மானதை எடுத்துள்ளோம்.
கல்வியில் ஏற்பட்டுள்ள நான்காவது மாற்றும்
இதுவாகும். சி..டப்ளியு. டப்ளியு. கன்னங்கர இலவச கல்வியினூடாக ஏழை
எளியோருக்கும் கல்வியைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றுகொடுத்தார். அது மஹிந்த
சிந்தனையினூடாக மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.


0 Comments