Subscribe Us

header ads

இரவு நேரத்தில் விஹாரையில் தங்கியிருந்து பகல் நேரத்தில் உடைகளை மாற்றி மாணவியுடன் சுகம் அனுபவித்த பிக்கு !

இரவு நேரத்தில் விகாரையில் தங்கி பகல் நேரத்தில் 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் சுகம் அனுபவிப்பதாக கூறப்படும் இளம் பௌத்த பிக்கு ஒருவரை மிரிஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான பிக்கு நுகேகொட பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ள இப்பிக்கு இரவு நேரத்தில் விகாரையில் தங்கியிருப்பதுடன் பகல் வேளையில் பல்வேறு வகையான உடைகளை அணிந்து மாணவி சந்தித்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கடந்த 13ஆம் திகதி மாலை இந்த பிக்கு மாணவியை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அவர் மாணவியை பாடசாலை சீருடையுடன் அவரது நண்பரொருவரது வீட்டுக்குச் சென்று உடைகளை மாற்றி அங்கு தங்கிருந்து விட்டு சென்றுள்ளதாகவும் நண்பரின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மாணவியொருவரை வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக நுகேகொட பொலிஸ்நிலய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது 50,000 சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டார். மாணவி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments