Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று... ஒக்டோபர் 17


1091 : லண்­டனில் கடும் சூறா­வளி தாக்­கி­யது.


1346 : இங்­கி­லாந்தின் மூன்றாம் எட்வேர்ட் மன்னர், ஸ்கொட்­லாந்தின் இரண்டாம் டேவிட் மன்­னனைச் சிறைப்­பி­டித்து பதி­னோ­ராண்­டுகள் லண்டன் கோபு­ரத்தில் அடைத்து வைத்தார்.

1448 : கொசோ­வோவில் ஹங்­கே­ரிய இரா­ணுவம் ஒட்­டோமான் படை­க­ளினால் தோற்­க­டிக்­கப்­பட்­டனர்.

1610 : பதின்­மூன்றாம் லூயி பிரான்ஸின் மன்­ன­னாக முடி சூடினான்.

1660 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்­ன­னுக்கு மரண தண்­ட­னையை அறி­வித்த ஒன்­பது பேர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1662 : இங்­கி­லாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவு­ணிற்கு பிரான்­ஸுக்கு விற்றான்.

1800 : டச்சு குடி­யேற்ற நாடான குரக்­காவோ இங்­கி­லாந்தின் கட்­டுப்­பாட்டில் வந்­தது.

1805 :  ஊல்ம் நகரில் இடம்­பெற்ற சமரில் ஆஸ்­தி­ரியப் படை­யினர் பிரான்ஸின் நெப்­போ­லியன் போன­பார்ட்டின் படை­க­ளிடம் வீழ்ந்­தன.

1806 : ஹெய்ட்­டியின் மன்னன் முதலாம் ஜாக் படு­கொலை செய்­யப்­பட்டான்.

1907 : அட்­லாண்டிக் நக­ரங்­க­ளுக்­கி­டை­யே­யான தனது முத­லா­வது கம்­பி­யில்லாத் தொடர்பை கன­டாவின் நோவா ஸ்கோசி­யா­வுக்கும், அயர்­லாந்­துக்கும் இடையே  மார்க்­கோனி  ஏற்­ப­டுத்­தினார்.

1912 : முதலாம் பால்க்கன் போர்: பல்­கே­ரியா, கிரேக்கம், சேர்­பியா ஆகி­யன ஒட்­டோமான் பேர­ர­சுடன் போரை அறி­வித்­தன.

1917 : முதலாம் உலகப் போரில் ஜேர்­மனி பிரித்­தா­னியா மீதான தனது முத­லா­வது குண்டுத் தாக்­கு­தலை நிகழ்த்­தி­யது.

1933 : பௌதீ­க­வியல் விஞ்­ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன், நாஸி ஜேர்­ம­னியில் இருந்து வெளி­யேறி அமெ­ரிக்­காவில் குடி­யே­றினார்.

1941 : இரண்டாம் உலகப் போரில் முதற் தட­வை­யாக ஜேர்­ம­னிய நீர்­மூழ்கிக் கப்பல் அமெ­ரிக்கக் கப்­பலைத் தாக்­கி­யது.

1956 : உலகின் முத­லா­வது வர்த்­தக அணுமின் நிலையம் இங்­கி­லாந்தில் திறக்­கப்­பட்­டது.

1961 : பாரிஸ் நகரில் போராட்­டத்தில் ஈடு­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான அல்­ஜீ­ரி­யர்கள் பொலி­ஸாரால்  சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1965 : 1964 நியூயோர்க் உலகக் கண்­காட்சி இரண்­டாண்­டு­களின் பின்னர் முடி­வுற்­றது. மொத்­த­மாக 51 மில்­லியன் மக்கள் இக்­கண்­காட்­சியைக் கண்டு களித்­தனர்.

1966 : நியூ­யோர்க்கில் கட்­டடம் ஒன்றில் இடம்­பெற்ற தீயில் 12 தீய­ணைப்புப் படை­யினர் சிக்கி இறந்­தனர்.

1973 : சிரி­யா­வுக்கு எதி­ரான யுத்­தத்தில் இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளித்த குற்­றச்­சாட்டில் மேற்கு நாடு­க­ளுக்­கான எண்ணெய் ஏற்­று­ம­திக்கு ஒபெக் அமைப்பு தடை விதித்­தது.

1979 : அன்னை தெரே­சா­வுக்கு சமா­தானத்துக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது.

1995 : யாழ்ப்­பா­ணத்தை விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து கைப்­பற்ற இலங்கை இரா­ணுவம் ரிவி­ரெச நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­தது.

1998 : நைஜீரியாவில் பெற்றோலியக் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.

2003 : "தாய்ப்பே 101" உலகின் மிக உயரமான கட்டடமாகியது.

2006 : ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

Post a Comment

0 Comments