Subscribe Us

header ads

சுறாக்களின் சண்டையில் சிக்கிக்கொண்ட நெத்திலிக் குஞ்சு

(கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுதீன்)
அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் இலங்கையில் மையம் கொண்டுள்ளது. இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு, இந்தியாவை மாத்திரமன்றி அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய சக்திகளை கவலை கொள்ளச்செய்துள்ளன.
ஜனவரி மாதம் 2015-ல் இடம்பெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும், தொடர்ந்து ஏப்ரல் மாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பாராளுமன்றத் தேர்தலகளிலும் பிராந்திய பூகோள அதிகார இழுபறி மிகவும் தெளிவாகவேபிரதிபலிக்கும் என்பது தற்பொழுது புலனாகிறது.
இலங்கையில் இனப்பிரச்சினை விவகாரம் தேசத்தின் நலன்களுக்காக அன்றி பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் நலன்களுக்காகவே கடந்த மூன்று தசாபதங்களாக கையாளப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டு தடைசெய்துள்ளமை தவறானதென ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் சுயாதிபத்தியத்திற்கும் அச்சுறுத்தலானது என கூறும் சில கடும்போக்கு சக்திகள் அதனை இரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கின்றது.
சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கை விரும்பாத இந்தியா மேலைத்தேய நாடுகளின் நகர்வுகளை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளலாம்.
ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான வழக்கை தொடுத்து முன்னகர்த்திய சுப்பிரமணியம் சுவாமி இலங்கை அதிபரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னால் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பதவி விலக முன் ஜெயலலிதாவை தமிழ் நாட்டில் வந்து சந்தித்ததன் பின் சர்வதேச மனித உறவுகள் நெருக்குவாரங்கள் தொடர்பான நகர்வுகளில் இந்தியாவின் நிலைப்பாடுகள் மாற்றமடைந்தமை தெரிந்தமையே.
முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இந்த பிராந்திய சர்வதேச நகர்வுகளின் அரசியல் இராஜதந்திர பரிமாணங்கள் புரிவதற்கான அறிகுறிகள் அறவே தெரியவில்லை.


/Az

Post a Comment

0 Comments