Subscribe Us

header ads

அமீர் அலி நூலகத்தின் பத்திரிகைப்பிரிவு இரவு 8 மணி வரை திறந்திருக்கும்-தவிசாளர்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

வாசகர்களின் நலன் கருதி, சம்மாந்துறைப் பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட் அவர்களின் வேண்டுகோளின் பெயரில், அமீர் அலி பொது நூலகத்தின் பத்திரிகைப்பிரிவு இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும். 
சம்மாந்துறைப் பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நௌஷாட்  அவர்களின் இந்நடவடிக்கை சம்மாந்துறை மக்களினது அறிவு வளர்ச்சியில் பாரிய செல்வாக்குச் செலுத்துமென சம்மாந்துறை வாழ் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments