ரூசி சனூன் புத்தளம்
புத்தளம் தொகுதிக்கான ஐ.தே.கட்சி காரியாலயம் புத்தளம் மஸ்ஜித் வீதியில் சனிக்கிழமை (11) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி
அமைப்பாளராக, புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும், ஸ்ரீ.லங்கா சுதந்திர
கட்சியின் நீண்ட கால உறுப்பினருமான எம்.என்.எம். நஸ்மி ஐ.தே.கட்சி
தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால்
நியமிக்கப்பட்டதையடுத்து அவரின் மக்கள் தொடர்பு அலுவல்களுக்காக இந்த
காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 35 வருடகாலமாக
நீல நிறத்தோடு ஸ்ரீ.லங்கா சுதந்திர கட்சி காரியாலமாக இயங்கி வந்த
குறிப்பிட்ட இந்த காரியாலயம் தற்போது பச்சை நிறத்தோடு ஐ.தே.கட்சி
காரியாலயமாக பரிணாமம் அடைந்துள்ளது.
இந்த காரியாலய திறப்பு விழா
நிகழ்வில் புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி,
நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா, பாலித ரங்கே
பண்டார, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சித்ரால் பெர்னாண்டோ, விக்டர்
அப்புஹாமி, முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ்,
புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.ஓ. அலிகான் உள்ளிட்ட
நகர,பிரதேச சபை உறுப்பினர்கள், ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து
சிறப்பித்தனர்.
நன்றி: Puttalam Online


0 Comments