Subscribe Us

header ads

விமானப்படைத் தினத்தின் போது சீருடையில் சமூகமளித்த சச்சின்


82 ஆவது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் புதுடெல்லியில் பிரம்மாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விமானப்படை சீருடையுடன் பங்கேற்றிருந்தமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது.

சச்சினது சாதனையை கௌரவிக்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டு இவர் விமானப்படையின் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வகையான ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

Post a Comment

0 Comments