கடந்த 30 வருட கால உள்நாட்டு போரினாலும் நிச்சயமற்ற அரசியல் சூழலினாலும்
பந்தாடப்பட்டு நலிவுற்று போயுள்ள கிழக்கு வாழ் மக்களினது பொருளாதார
,அரசியல் ,கல்வி ரீதியில் பாரிய ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதையும் -
கிழக்கை ஒரு ஏற்றுமதி வலையமாக மாற்றி அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துவதையும் இலக்காக கொண்டு புதிய அரசியல் கட்சி ஒன்று
இலங்கையில் தோற்றம் பெற்றுள்ளது.
“மனித உரிமைக்கான தேசிய ஜனநாயக கட்சி” எனும் பெயரில் சம்மாந்துறையை
பிறப்பிடமாக கொண்ட-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால
உறுப்பினரும்,30 வருடங்கள் நிதி முகாமைத்துவ,பொருளாதார, அரசியல்
அனுபவத்தினை கொண்டவருமான முகைதீன் பாவா என்பவரால் ஸ்தாபிக்கப் பட்டுள்ள
இக்கட்சியானது இலங்கையில் உள்ள பல்வேறு துறைசார் விற்பன்னர்களை கொண்டு சகல
இனங்களையும் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து பாரிய நீண்ட கால திட்டங்களின்
அடிப்படையில் செயற்பட உள்ளது.
இது தொடர்பில் கட்சி இன் ஸ்தாபகர் முகைதீன் பாவா கருத்து தெரிவிக்கையில்;
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்ற கட்சிகளின் பொதுவான இலக்கிற்கு
புறம்பாக தமது கட்சியானது கிழக்கு மாகாணத்தை இலங்கையின் ஏற்றுமதி வலயமாக
மாற்றி அங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும்- குறிப்பாக
கிழக்கில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில்
தொழிற்பேட்டைகளை நிறுவி அதனூடாக கைவினைப் பொருட்களின் உற்பத்தியை
ஊக்குவித்து அவற்றை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை
முன்னெடுக்க உள்ளதாகவும் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் விரைவில்
செயற்படுத்த பட உள்ளதுடன் இது தொடர்பில் சர்வதேச முதலீட்டாளர்களுடன்
ஏற்கனவே தமது கட்சி தொடர்புகளை கொண்டுள்ளதால் தமது இலக்கினை துரிதமாக அடைய
முடியும் என்றார் .
அத்துடன் கல்வி அபிவிருத்தி மற்றும் அரசியல் விழிப்புணர்வு போன்ற நீண்ட
கால வினைத்திறன் மிக்க திட்டங்களையும் இலக்காக கொண்டு அனைத்து
இனங்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் அமைப்பாக தமது கட்சி எதிர்காலத்தில்
மிளிரும் என மனித உரிமக்கான ஜனநாயக தேசிய கட்சி இன் ஸ்தாபகர் முகைதீன் பாவா
மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.
1 Comments
ஒன்று பத்தாகி பத்து நூறவதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். வாழ்க முஸ்லிம் சமூகம். கட்சி கட்சியென்று எங்களை சுக்குனூறாக்குகின்றமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு.............
ReplyDelete