2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின்
போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட
செல்வாக்கும் ஆதரவும் கிரமமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது என சர்வதேச
ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தேசித்துள்ளதாகவும்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரபல்யம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும்
இதனால் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே தேர்தலை
நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம்
திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முடியும் என்றும்
எதிர்க்கட்சிகள் வலுவான நிலையை எட்டுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை
நடாத்தும் முனைப்புக்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் சர்வதேச
ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
DC
0 Comments