Subscribe Us

header ads

தமக்குரிய தனித்துவ அடையாளத்தை இஸ்லாத்தில் தேடும் அமெரிக்கர்கள்


இலத்தின் அமெரிக்காவிலிருந்து ஜக்கிய அமெரிக்கா (USA)-க்கு புலம்பெயருவோர் தமக்குரிய அடைக்கலத்தையும் அடையாளத்தையும் இஸ்லாத்தில் காணுகின்றனர். இஸ்லாத்தின் வழிகாட்டல் அவர்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

"அது அவர்களின் உலகை, எது அனுமதிக்கப்பட்டவை 'ஹலால்' எவை தவிர்க்கப்பட்டவை 'ஹராம்' என்ற தெளிவான கட்டமைப்புக்குள் நிரல்படுத்துகின்றது. இதன் காரணமாக தாம் எங்கு நிற்கின்றோம் என்பதை அவர்கள் அறிகின்றார்கள்" என ஸ்டெஃபனீ லொன்டொனொ (Stephanie Londono), Florida International University பல்கலைக் கழக முதுமாணி பட்டதாரி இலத்தினர்களின் சமய மாற்றம் குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றாள்.



"ஆகவே, எதனை அணிய வேண்டும், உண்ண வேண்டும், எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எப்பொழுது வழிபாடுகளை செய்ய வேண்டுமென தெள்ளத்தெளிவாகக் கூறும் வழிகாட்டியாக குர்ஆன் மாறியுள்ளது" என கூறுகின்றாள்.

whyIslam.org நிறுவகம் அமெரிக்க முஸ்லிம்களில் இலத்தினோக்கள் 6% எனக் கூறுகின்றது. Latino American Dawah Organization (LADO)-ம் இப் புள்ளிவிவரத்தை வழங்குவதுடன் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களில் பாதியை விட அதிகமானோர் பெண்களென்றும் கூறுகின்றது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரம் இல்லாதபோதும் சுமார் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் ஐக்கிய அமெரிக்காவில் வாழுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில இலத்தினோக்களுக்கு தமக்கென ஓர் அடையாளம், தனித்துவம் இழக்கப்படும் அச்சத்தின் காரணமாகவும் இஸ்லாத்தை ஏற்றுக்-கொள்கின்றனர்.

தனது கணவன் குழந்தைகளுடன் நான்கு வருடங்களுக்கு முன் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த கியுபா நாட்டுப் பெண்ணான கிரேசா டோரஸ் (Greisa Torres) தனது இரண்டாவது மகன் மஹ்தியின் பிரசவத்தின் போது இஸ்லாத்தை ஏற்றாள்.

"எங்களுக்கென்று குடும்பங்கள் இருக்கவில்லை. நானும் குழந்தையும் மட்டும்தான். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அன்று எனது குழந்தை - மஹ்தி - பிரசவ நாள். எனக்கு பயமாக இருந்தது. அதனால்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன்" என டோரஸ் கூறுகின்றாள். 

ஹிஜாப் அணிந்து வெளியில் செல்லுவதினால் அரபிகள் எல்லோரும் முஸ்லிம்கள் ஹிஸ்பானிகர்கள் Hispanics (ஸ்பெயின் மொழிபேசும் அமெரிக்கர்கள்) எல்லோரும் கிரிஸ்தவர்கள் என்ற சம்பிரதாய பழங்கருத்து உடைந்துவிடுகின்றது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

"ஹிஜாபுடன் மக்கள் உங்களைக் கண்டவுடன் முதலில் கண்ணியப்படுத்துகின்றார்கள். அடுத்து, இந்த உணர்வு நீங்கள் வித்தியாசமானவர் என்பதைக் காட்டுகின்றது. நீங்கள் ஒரு விடயத்தை விசுவாசம்கொண்டுள்ளீர்கள். இந்த உணர்வு அலாதியானது".


நன்றி: The Puttalam Times

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments