Subscribe Us

header ads

தொடர்ந்தும் கேள்விக்குறியாகும் 'ஹலால்' தன்மை


(இம்தாத் பஷர், புத்தளம்)

Whey powder அல்லது whey அல்லது whey protein என்பன பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பதார்த்தம். சீஸ் தயாரிப்பின் ஓர் உப உற்பத்தி (by-product). 'வே' பல சீஸ் வகைகளில், சில சாக்லேட் வகைகளில், இன்னும் சில பால் உற்பத்திப் பொருட்களில் காணப்படுகின்றது.

சீஸ் தயாரிப்பில் பால் திரட்சியடையும் போது உறுவாகும் அல்லது எஞ்சும் திரவம் உலர்த்தப்பட்டு 'வே' பொடி தயாரிக்கப்படுகின்றது.

பிரச்சினை எங்குள்ளது என்றால் பெரும்பாலான சீஸ் உற்பத்திகளில் பால் திரட்சி அடைவதற்காக ரெனே (Rennet) எனும் நொதியம் பயன்-படுத்தப்படுகின்றது.

இந்நொதியம் பாலருந்தும் கன்றுகளின் குடலிலிருந்து பிரித்தெடுக்கப் படுகின்றது. கன்றுகள் ஹலாலாக அறுக்கப்படாதவிடத்து அதிலிருந்து பெறப்படும் Rennet ஐ உணவு பதார்த்த உற்பத்தியில் பயன்படுத்த அனுமதியில்லை.

எனவே Whey powder பாலில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் Rennet நொதியத்தின் ஹலால் தகுதியை பொறுத்து whey powder அல்லது whey இன் ஹலால் தகுதி வேறுபடும்.

எனவே நாம் கொள்வனவு செய்யும் சீஸ், சாக்லேட் மற்றும் பால் உற்பத்திகளின் ஹலால் தன்மையை பரீட்சித்து உட்கொள்ளுவோம். எமது பிள்ளைகளுக்கும் ஹலாலான உணவுகளையே ஊட்டுவோம். 

கொழும்பிலுள்ள சாபக்கேடு என்னவென்றால் அவசர உணவகங்களில் சீஸை உணவில் சேர்ப்பதை வாடிக்கையாக்கி விட்டார்கள். நகரங்களில் காணப்படும் கவர்ச்சியான உணவுகளை கண்டதும் ருசிக்காமல் சற்று விபரம் விசாரித்து சாப்பிடுவோம். சந்தேகமானதை புசிக்காமல் தவிர்ந்து கொள்வது நன்று. 

அல்லாஹ் எம் அனைவரினதும் துஆக்கள் நிராகரிக்கப்படுவதை விட்டும் பாதுகாப்பானாக.

நன்றி: The Puttalam Times




கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments