ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 168 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் ஒருவன் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கெப்பத்திகொல்லாவ கிம்பிரிவவ பிரதேச கனிஷ்ட பாடசாலை ஒன்றின் மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
மஹரகம புற்று நோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே வகுப்புக்களுக்குச் செல்லாது புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சை முடிவுகளைப் பெற்ற பின்னரே இந்த மாணவன் உயிரிழந்துள்ளான்.
இம்மாணவன் பாடசாலையில் மிக திறமைகாட்டி வந்துள்ளதுடன் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்று ஆவலுடன் இருந்துள்னான். இதன் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சைக்கு முதல் நாள் வீடு வந்து பரீட்சை எழுதி விட்டு அன்றே மீண்டும் மகரகமை புற்று நோயாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.
0 Comments