க.பொ.த சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் விசேட சேவையொன்றை ஆட்பதிவுத் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதுவரை அடையாள அட்டை கிடைக்காத மாணவ மாணவிகள் கீழ்க் கண்ட விபரங்களை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்படுகின்றனர்.
விண்ணப்பதாரியின் பெயர், பிரதேச செயலாளர் பிரிவு, பாடசாலையின் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை அனுப்பிவைக்கும்படியும் மேலதிக விபரங்களுக்கு 011- 2555616, 0112 506458 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments