மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் மீது பெண் ணொருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
இங்கிரிய பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றது. இங்கிரிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் பெண்ணை கைது செய்துள்ளனர். மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் 11,763 ரூபா செலுத்தாததால் இங்கிரிய கிரிகல பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்காக மின் சார சபையின் ஊழியர் குழுவினர் சென்றுள்ளனர்.
அவர்களுள் ஒருவர் மீது பெண் தாக்கியுள்ளார். இங்கிரிய பொலிசில் செய்யப்பட்ட முறைப் பாட்டினையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிரிய பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.
Share the post "மின்சார சபை ஊழியருக்கு தும்புத்தடி
0 Comments