Subscribe Us

மதுரங்குளியில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது தாக்குதல்


மதுரங்குளி – ஜெயராஜபுரம் பிரதேச வீடொன்றில் இன்று கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 03.00 மணியளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் வீட்டுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் வீட்டு உரிமையாளருடன் முரண்பாடுள்ள ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது உள்நாட்டு கைக்குண்டா அல்லது வெளிநாட்டுக் கைக்குண்டா என இதுவரை தெரியவரதா நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments