Subscribe Us

பொதுபல சேனாவின் பெளத்த ஹிந்து நட்புறவு மாதம் ஆரம்பம் – படங்கள்

பொதுபல சேனா மற்றும் அகில இலங்கை ஹிந்து சம்மேளனம் ஏற்பாட்டில் பெளத்த ஹிந்து நட்புறவு மாதம் இன்று தீபாவளி தினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை நெதிமால, தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பெளத்த கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹிந்து முறைப்படியான பூஜை வழிபாடுகள் தெஹிவளை எண்டசன் வீதியில் அமைந்துள்ள ஹிந்து கோவிலில் இடம்பெற்றது.


இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா நிறைவேற்று அதிகாரி திழந்த விதானகே, தலைவர் கிராம விமலா ஜோதி தேரர், பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அகில இலங்கை ஹிந்து சம்மேளனத்தின் தலைவர் எம். அருள்காந்த் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.






Post a Comment

0 Comments