Subscribe Us

header ads

அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்

(கலாநிதி இனாமுல்லாஹ் மஸிஹுதீன்)
அரசியல் அமைப்பு முழுமையாக மாற்றப்பட்டு பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்.
நியாயமான பிரதிநிதித்துவ முறையை ஊர்ஜிதம் செய்யும் வகையில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படல் வேண்டும்.
உலகில் எங்குமில்லாத நிறைவேற்று அதிகாரமிக்க ஜானதிபதி முறை இலங்கையில் இருக்கிறது, நாட்டின் தலைவர், அரசின் தலைவர், பாதுகாப்புப் படைகளின் தலைவர் என வரையறையற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ள ஜனாதிபதி ஒரு பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருட நிறைவில் அதனை கலைக்க, ஒத்திவைக்க, அதன்காலத்தை நீடிக்க என ஜனநாயக் விரோத அதிகாரங்களைக் கொண்டுள்ளார்.
நீதித்துறை சுயாதீனமானது எனக் கூறப்பட்டாலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ளார், அதேபோன்று தேர்தல், பொதுசேவைகள், ஊடகத்துறை, சிவில் பாதுகாப்பு, பொலிஸ் என ஒருஜனநாயக் நாட்டில் சுயாதீனமாக இயங்க வேண்டிய அனைத்து யந்திரங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பில் இருந்தும் பிரான்ஸ் அமைப்பில் இருந்தும் சாதகாமான சர்வாதிகாரங்களை மாத்திரம் உள்வாங்கி 1978 ஆம் ஆண்டு அன்றைய அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தானா அவர்கள் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பும், அதன் மீது இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள 18 திருத்தங்களும் முற்று முழுதாக மீள் பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.
அந்த யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை,விருப்பு வாக்குமுறை,ஜனாதிபதி முறை என அனைத்தும் இந்த நாட்டை பாரிய ஊழல் மோசடி நிவாகச் சீர்கேடுகள், அதிகார இழுபறிகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளன.
தேசிய அளவில் ஜே.வீ.பீ, சோபித தேரர், ரத்ன தேரர், ஐக்கிய தேசியக் கட்சி, தினேஷ் குணவர்த்தன போன்றவர்கள் மாத்திரமன்றி சரத் என் சில்வா, ஜயம்பதி விக்கிரமரத்ன போன்ற யாப்பியல் சட்டத்துறை நிபுணர்கள் முன்வைக்கின்ற புதிய அரசியலமைப்பு சார்ந்த பிரேரணைகளை தேசிய முக்கியத்துவம் கருதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆராய்ந்து தேசப்பற்றுடன் கூடிய தமது நிலைப்பாடுகளை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து முன் வைக்க முன்வர வேண்டும்.
அரசியலமைப்பின் மீதான 17-வது திருத்தப் பிரேரணையை வலிதற்றதாக்கியதோடு 18-வது திருத்தப் பிரேரணையை கொண்டுவந்ததன் மூலம் அரசும், ஆதரவளித்ததன் மூலம் ஸ்ரீ.ல.மு.கா மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவின்றி அதனை நிறைவெற்றிக்கொள்ள முடியாத நிலையே அன்று இருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.
தற்போது அதிகாரத்தில் இருக்கும் அதிபர் மஹிந்த, அல்லது அதனை அடையக் காத்திருக்கும் ரணில் அல்லது அடுத்த தனி நபர்களை மறந்து இந்த தேசத்திற்கான தேசப்பற்றுள்ள ஒரு பங்களிப்பை தமது தெளிவான நிலைப்பாடுகள் மூலம் முஸ்லிம்கள் கால தாமதமின்றி மேற்கொள்ள முன்வரல் வேண்டும்.

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments