Subscribe Us

header ads

ஜனாதிபதி மஹிந்த சொன்ன நகைச்சுவை - பாராளுமன்றத்தில் சிரிப்பொலி


அரசாங்கத்துக்கு சேதத்தை ஏற்ப டுத்தக்கூடிய எந்த யானையையும் எதிர் தரப்பில் காண்பதற்கில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று 24-10-2014 பாராளுமன்றத்தில் நகைச் சுவையாகத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யானைகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் சொத்து சேதத்துக்கும் நஷ்டஈடு வழங்கப்போவதாக அறிவித்தார்.

இதன் போது எதிர்தரப்பு எம்.பி. ஒருவர், குறுக்கிட்டு,, யானையினால் அரசாங்கத்துக்கு சேதம் ஏற்பட இருப்பதாக குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறு அரசாங்கத்துக்குப் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய யானை எதனையும் காண்பதற்கு இல்லை எனவும் தான் முன்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாலும் பின்னால் நடப்பதையும் கவனித்துக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது சபை சிரிப்பொலியில் நிறைந்தது.

/JAH


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments