கொஸ்கந்த, மீரியாவத்த பிரதேசத்தில் மண்சரிவினால் அழிவடைந்துள்ள
வீடுகளுக்கு பதிலாக வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென
வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் பல
அழிவடைந்துள்ளன. இதனால் பல மக்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லல்படுகின்றனர்.
இவர்களுக்கு ஜனசெவன தேசிய வீடமைப்பு திட்டத்தினூடாக வீடுகள் அமைத்துக்
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோர் வீடுகள் தொடர்பிலும், குறித்த குடும்பங்கள்
தற்காலிகமாக தங்கியுள்ள இடங்கள் குறித்தும் உடனடியாக ஆராய்ந்து
பார்க்குமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதான காரியாலயத்திற்கும்,
தேசிய வீடமைப்பு சபையின் பதுளை மாவட்ட காரியாலய அதிகாரிகளுக்கும் அமைச்சர்
ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த மண்சரிவினால் 70 லயன் வீடுகள், 03 தனி வீடுகள், பாலர் பாடசாலை, வணக்கஸ்தலங்கள், உட்பட பல பொது வசதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன.


0 Comments