Subscribe Us

header ads

தொழுகையின் போது இமாம் மீது மண்ணெண்னை ஊற்றி எரித்து கொல்ல முயற்சி!


டெல்லி ஜாமா மஜித்தில் நேற்று மாலை தொழுகையின் போது ஷாகி இமாம் செய்யத் அஹமத் புகாரி மீது 34 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மண்ணெண்னை ஊற்றி தீவைக்கை முயன்றார்.ஆனால் சுற்றி இருந்தவர்கள் வாலிபரை தடுத்து அவரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இமாம் மீது தாக்குதல் நடத்த முயன்றவர் பெயர் கமாலுதீன் என்கிற கமால் என்றும் அவர் மேற்குவங்காள மாநிலம் பர்கனாஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு ( இந்திய தண்டனை சட்டம் 307) பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலையில் இது குறித்து கூறிய இமாம் தொழுகைக்கு முன் தான் முற்றத்தில் நடைபயிற்சியில் இருந்த போது குற்றவாளி தன்னை மாலை சந்திக்க முயன்றார். பிறகு அவர் என்னுடன் கைகுலுக்கினார், பிறகு அந்த பகுதியில் தான் சுற்றி வந்தார். அவர் வெள்ளை சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்து இருந்தார். அவர் மசூதிக்கு தொழுகை நடத்த வந்தவர் போல் தெரியவில்லை என கூறினார்.


புகாரி தொழுகைக்காக குனிந்த போது குற்றவாளி தான் மறைந்த்து வைத்து இருந்த 300 மில்லி பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்ணெண்னையை இமாம் மீது ஊற்றினார். பின்னர் லைட்டரால் தீ பற்றவைக்க முயன்றார். உடனடியாக சுற்றி இருந்தவர்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்

Post a Comment

0 Comments