Subscribe Us

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் – கெஹலிய


ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்ற சர்வதேச சூழ்ச்சி நடைபெறுவதை ஐரோப்பாவில் புலிகள் அமைப்புக்கு தடையை நீக்கியதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய பின்னணியில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கக் கூடுமென்ற, நியாயமான சந்தேகங்கள் தற்பொழுது எழுந்துள்ளது, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்த நிலையிலேயே புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது. இதற்கு முன்னரும் டயஸ்போராக்களை சந்திப்பதற்காக ரணில் பல தடவைகள் இங்கிலாந்து மற்றும் மலேசியாவுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள், சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். அகவே கட்சி பேதமின்றி அனைவரும் அவரை வெற்றிபெறச் செய்ய முன்வரவேண்டும்.

ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தனக்கு தெரிந்தாலும்கூட தற்போது அறிவிப்பது உகந்ததல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கண்டி – குண்டசாலை தொகுதி இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments