அமெரிக்காவின் கான்கஸ் Kansas மாநிலத்தில் காணப்படும் விசிதா Wichita விமானநிலையத்தில் நேற்று வியாழக்கிழமை சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
விமானம் தரையிறங்கும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென விமானநிலையத்தில் இருந்த கட்டிடம் ஒன்றில் மோதியதைத் தொடர்ந்து குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விமானம் தீப்பற்றி எரிந்ததுடன் கட்டிடமும் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளது.
இந்நிலையில் தற்போது விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
ஊயிரிழந்தவர்களில் மூவர் குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் என்றும் ஒருவர் விமானத்தை செலுத்திய விமானியெனவும் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
:ET
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments