பால் கறத்தல் உலக சம்பியன்ஷிப் போட்டியில் மாடொன்று இரண்டு நிமிடத்தில் 8.7 லீற்றர் பால் கறந்து உலக சாதனை படைத்துள்ளது.
இவ்வருடத்துக்கான பால் கறத்தல் உலக சம்பியன்ஷிப் போட்டி பிரேஸிலில் அண்மையில் நடைபெற்றது. முதல் 3 இடங்களைப் பெற்ற போட்டியாளர்களும் தத்தமது பசுவில் இரண்டு நிமிடங்களில் 7 லீற்றருக்கும் அதிகமாக பால் கறந்துள்ளனர்.
இதில் முதல் இடத்தை பெற்ற இத்தாலியரான கியன்மெரியோ கிராரர்டி என்பவர் தனது பசுவில் இரண்டு நிமிடங்களில் 8.7லீற்றர் பால் கறந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆனால், இப்போட்டியின்போது அதிக பால் கறக்கச் செய்வதற்காக பசுக்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்குமுன் உலக சாதனையாக 2 நிமிடத்தில் 2 லீற்றர் பால் மாத்திரமே கறக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், போட்டியின் ஏற்பாட்டுக்குழு உப தலைவர் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இப்போட்டியில் பங்குபற்றிய மாடுகள் அனைத்தும் ஒரு மணித்தியாலமாக சோதனைக் குள்ளாக்கப் பட்டதாகவும் 8 நடுவர்கள் இப்போட்டியில் பணியாற்றி யதாகவும் தெரிவித்துள்ளார்.


0 Comments