ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நடத்தப்படுமானால் பாப்பரசரின் இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்படும் சாத்தியங்களே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை பாப்பரசரின் விஜயம் தொடர்பான ஆயத்தங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் இடம்பெறும் நிலையில் நாடு ஒன்றுக்கு பாப்பரசர் விஜயம் மேற்கொள்வதில்லை என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி வத்திக்கானுக்கு சென்று பேசிய விடயங்கள் இன்னும் வெளியாகவில்லை.
என்றாலும், ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை பாப்பரசரின் விஜயம் தொடர்பில் வத்திக்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுக்காது என்றே தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பாப்பரசரின் விஜயம் காரணமாக ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாததுக்கு பிற்போடப்படலாம் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருந்தது.
எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆளும் கட்சி தேர்தல் காரியாலங்களை நிறுவுவுதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைத்து வருவது இதற்கான காரணமாகும்.
மறுபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும் தேர்தல் ஆயத்தங்களில் முனைப்புக்காட்டி வருகிறது.
எனவே பாப்பரசரின் விஜயம் தொடர்பிலான அறிவித்தல், நவம்பர் மாத பிற்பகுதியில் அதாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் போதே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments