Subscribe Us

59 வய­தான பாட்­டனார் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக பொய் கூறிய 15 வயது சிறுமி மீது குற்­றப்­பத்­தி­ரிகை

வீட்டில் தனித்­தி­ருந்த போது தனது பாட்­டனார் தம்மை கொடூ­ர­மாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்தில்  பொய் கூறி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­தது தொடர்பில்  சிறு­மிக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்யும் படி காலி உயர் நீதி­ ன்றம்  நீதி­மன்ற பதி­வா­ள­ருக்கு உத்­த­ர­விட் டார். 

அது­வரை சிறுமியை இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனு­ம­திக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளார். 15 வய­தான சிறு­மியே இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வ­ராவார். 


யக்­கல்­முல்ல பொலிஸ் பிர­தே­சத்தில் 2009 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திக­தி­ முதல் 15 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் அப்­போது 10 வய­தா­க­வி­ருந்த சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக அவரின் பாட்­ட­னாரான 59 வயது நப­ருக்கு எதி­ராக இவ்­வ­ழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. 

வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது முறைப்­பாட்­டாளர் சார்பில் ஆஜ­ரான அரச சட்­டத்­த­ரணி சம­தரி பிய­சேன இது தொடர்­பாக சாட்­சியை ஆழ­மாக விசா­ரணை செய்­த­தா­கவும் சாட்சி தம்மை பாட்­டனார் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­த­வில்லை என்றும் பொலிஸாரிடமும் டாக்டரிடமும் பொய் கூறியதாக கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரி வித்தார். 

இதையடுத்தே நீதியரசர் மேற்கண்ட வாறு உத்தரவிட்டார்.

/JAH


Post a Comment

0 Comments