Subscribe Us

வரலாற்றில் இன்று... ஒக்டோபர் 20

1803 : லூசி­யானா மாநி­லத்தை பிரான்­ஸிடம் இருந்து கொள்­வ­னவு செய்யும் ஒப்­பந்­தத்துக்கு ஐக்­கிய அமெ­ரிக்கா  ஒப்­புதல் அளித்­தது.

1827 : ஒட்­டோமான், எகிப்­தியப் படைகள் பிரித்­தா­னி­ய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவா­ரினோ என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் தோற்­க­டித்­தன. இது கிரேக்க விடு­தலைப் போரை முடி­வுக்குக் கொண்­டு­வந்­தது.

1941  கிற­கு­ஜேவாச் படு­கொ­லைகள்: சேர்­பி­யாவின் கிற­கு­ஜேவாச் நகரில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் நாசி ஜேர்­ம­னி­யர்­க­ளினால் கொல்­லப்­பட்­டனர்.

1944  இரண்டாம் உலகப் போர்: சோவியத் இரா­ணுவம் யூகோஸ்­லா­வியத் தலை­நகர் பெல்­கி­ரேட்டை ஜேர்­ம­னி­யி­ட­மி­ருந்து மீட்­டது.

1944 : அமெ­ரிக்­காவின் கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்­பினால் 130 பெர் கொல்­லப்­பட்­டனர்.

1947: அமெ­ரிக்­கா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் இரா­ஜ­தந்­திர உறவு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1952 : பிரித்­தா­னிய ஆட்­சிக்­குட்­பட்­டி­ருந்த கென்­யாவில் அவ­சர கால­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு, கிளர்ச்­சியில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கானோர் கைது­செய்­யப்­பட்­டனர். பின்­னாளில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வான ஜோமோ கென்­யாட்­டாவும் இவர்­களில் ஒரு­வ­ராவார்.

1961: நீர்­மூழ்­கி­யி­லி­ருந்து கண்­டம்­விட்டு கண்டம் பாயும் ஏவு­க­ணையை சோவியத் யூனியன் முதல் தட­வை­யாக பரி­சோ­தித்­தது.

1962 : இந்­தி­யாவின் எல்­லைப்­ப­கு­தியில் சீன தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது. இது இந்­திய -சீன யுத்­தத்துக்கு வழி­வ­குத்­தது.

1976 : அமெ­ரிக்­காவின் மிசி­சிப்பி ஆற்றில் பய­ணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்­ப­லுடன் மோதி­யதில் 78 பய­ணிகள் கொல்­லப்­பட்­டனர். 18 பேர் மட்டும் தப்­பினர்.

1982 : இலங்­கையில் முதன் முதலில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­றது.

1982 : மொஸ்­கோவில் நடை­பெற்ற கால்­பந்­தாட்டப் போட்டி ஒன்றில் இடம்­பெற்ற நெரி­சலில் சிக்கி 66 பேர் இறந்­தனர்.

1991 : இந்­தி­யாவின் உத்­ர­கா­சியில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் சுமார் 1000 பேர் உயி­ரி­ழந்­தனர். 

2001 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.

2011 : லிபியாவில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேர்ணல் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

Post a Comment

0 Comments